இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்
கி-பி எட்டாம்நூற்றாண்டு முதல் கிபி 18ம் நூற்றாண்டு வரை இந்தியவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிற்ந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகஆதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்ரி அறிகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் -முஸ்லிம்களும்
---------------------------------------------------------------------
இந்துக்களையும்,முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத்திட்டமிட்டனர் வெள்ளையர்.அதற்கு இரு வழியினைக் கடைப் பிடித்தனர்.
1)இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்துக் கூறல்.
2)பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும்.பொறாமையையும்,குரோதத்தையும் ஏற்படுத்துதல்.
பிரிட்டிஷ் சதி
ஒரிஸாவின் முன்னாள் ஆளுனரும் முன்னால் ராஜ்யசபை உறுப்பினருமான பி.என்.பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படி திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும்பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:
"பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும்.எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளார் 'வுட்'எழுதியுள்ள கடிதத்தில்,
"ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம்.இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படாவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனத்தையும் செய்யுங்கள்"எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கவர்னர் ஜெனரல் டfபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,
"மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பொருத்த சாதகமாக உள்ளன.இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர் பார்க்கிறேன்"என எழுதிய்யுள்ளார்.
கர்ஸன் பிரபுக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் பின் கண்டவாறு எழுதிய்யுள்ளார்:
"படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.எனவே.இனத்துக்கு இனம் பிளவை அதிகப்படுத்துகிற வகையில் பாடப் புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்"
(இஸ்லாமும்,இந்தியக்கலாச்சாரமும்.byP.N.பாண்டே.நீரோட்டம் பதிப்பகம்,சென்னை)
இதன் அடிப்படையில் இந்திய சரித்திரப் பாடப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திருத்தி எழுதப்பட்டன.மத்திய காலத்தில் முஸ்லிம் மன்னர்களில் ஆட்சியில் இந்து மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர் என்பது போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக