வியாழன், 3 செப்டம்பர், 2009
வெள்ளயரின் சூழ்ச்சி (2)
பொருளாதாரத் தாக்குதல் இரண்டாவதாக,பொருளாதார ரீதியில் இருவரிடையே விரோதத்தை எற்படுத்த முனைந்தனர்.வங்காளத்தில் நிரந்தரக் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஊழியர்க்ளாக இருந்த இந்துக்களிடம் தரப்பட்டன.டாக்டர்.டபிள்யூ.டபிள்யூ.ஹாண்டர் பின்வருமாறு எழுதுகிறார்: நிரந்தரக் குடியேற்றத்தின் இலட்சியமே இந்து அதிகாரிகளை நிலச்சுவாந்தார்களாக் மாற்றுவதே.அன்றுவரை முக்கிய பதவிகளில் இல்லாமல் இருந்த வரி வசூலிப்பவர்களை இக்குடியேற்றம் உயர்த்திவிட்டது.முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியிருந்த செல்வங்களையெல்லாம் இந்த இந்து ஏவலாளார்கள் சேகரித்து கொள்ள அனுமதிக்கப்பட்டது."(Quote in the meaning of pakistan by F.K.Khan Duarrani). நிதி நிர்வாக விசயங்களில் முஸ்லிம்கள் புற்க்கணிக்கப்பட்டனர்.இராணுவத்தில் முஸ்லிம்கள் சேராமல் தடை செய்யப்பட்டனர். கல்கத்தாவிலிருந்து வெளிவந்த "டோர்பீன்"என்ற பத்திரிக்கை 1867ம் ஆண்டு ஜூலை 14ந்தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவலநிலையை வெளிப்படுத்தும். "பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன.ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாளரையும் ஒரே விதமாகப் பாவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.அவ்வாறிருக்க முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்குத் தங்களின் கெஜட்டுகளிலிருந்து முஸ்லிம்களைப் பகிரங்கமாக நீக்கிவிட்டிருந்தது.சமீபத்தில் சுந்தர் பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாயின.இதைப்பற்றிக் கமிஷனர்,அரசாங்கக் கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரபடமாட்டாதென அறிவித்திருந்தனர்.முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கணித்தே வைக்கப்பட்டிருந்தது.இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்கு முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்." மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்டச் சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும்,முஸ்லிம்களைவிடத் தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்னும் மனோபாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக