இந்நிலையில்,1857ம் வருடத்தில் பசுமாட்டின் கொழுப்பினால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் காரணம் காட்டி இந்து சிப்பாய்களால் சிப்பாய்க் கலகம் துவக்கப்பட்டது.அதில் முஸ்லிம்களும் பூரணமாகக் கலந்து கொண்டனர்.அக்கலகம் சில மாதங்களிலேயே ஒடுக்கப்பட்டு விட்டது.இந்துக்களில் சிலர் தங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து ஆயுதந்தாங்கிப் போரிட்ட முஸ்லிம்களுக்குத் துரோகிகளாக மாறி அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்தனர்.இதனால் அரசாங்கத்தின் கோபமெல்லாம் முஸ்லிம்கள் மீது விழுந்தது. சிப்பாய்க் கலகத்திற்குப் பின் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற கொடுமைகளை நேரில் கண்ட சர்.ஸையித் அஹ்மதுகான்.1887ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்த பம்பாய் பாரிஸ்டர் ஜனாப் பத்ருத்தீன் தையிப்ஜீக்கு எழுதிய கடிதத்தில் , "சிப்பாய் கலகத்தின் போது என்ன நடந்தது?இந்துக்கள் அதை ஆரம்பித்தனர்.முஸ்லிம்கள் அதிக தைரியத்துடன் அதில் ஈடுப்பட்டனர்.இறுதியில் இந்துக்கள்,கங்கையில் முழுகித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டு முன் போல் நல்ல பிள்ளைகளாகி விட்டனர்.ஆனால்,ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நசித்து நாசமடைந்தன."என குறிப்பிட்டுள்ளார். (பாகிஸ்தான் விளக்கம்.by எப்.கே.துர்ரானி) சொல்லவொணா துன்பங்களை அனுபவித்த முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் பல நிகழ்ச்சிகள் நடந்தன.இந்து தீவிரவாதிகளின் போக்கு 1867ல் காசியிலுள்ள இந்துத்தலைவர்கள் உருது மொழிக்கெதிராக கிளர்ச்சியில் ஏடுபட்டனர்.1875ல்'இந்தியா இந்துக்களுக்கே'என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்ய சமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும்.கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே. 1890ல் "முஸ்லிம்கள் அந்நியர்கள்"என்க் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர்.முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர். 1882ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி 'ஆனந்த மடம்'எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார்.அதில்தான் வந்தே மாதரம் என்ற கீதம் வருகிறது.அதில் இந்தியாவை 'காளி'என்ற கடவுளுக்கு ஒப்பிட்டு அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்கிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது. இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒரு வகையான பய உணர்ச்சியை ஏற்படுத்தின.அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியாது. காங்கிரஸும் முஸ்லிம்லீக்கும் இந்நிலையில்,1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது.அதன் முன்னோடி தலைவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே,அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆங்கிலேயர் தூவிய வேற்றுமை விஷ வித்துகளுக்கு பலியான இந்துமதத் தலைவர்கள் சுதந்திர போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர்.முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர்.விளைவு?1906ம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்.சர்.ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது. முஸ்லீம் லீக் ஏன் தோன்றியது?என்பதன் காரணத்தை R.P.Dutt இப்படி குறிப்பிடுகிறார். "தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமதஅடிப்படையில் நடத்த விரும்பினர்.இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழுப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர்.எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்துவிடாமல் இருக்க முயற்சித்தனர்.அதன் விளைவே 1906ல் முஸ்லிம்லீக் தோன்றியது". (Quoted in R.A.Deasai's social background of Indian Nationalism) Most members of the congress made a serious error refusing to admit the existence and validity of muslim nationalism.முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும் நிலைபாட்டையும் மறுத்ததின் மூலம் பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமான தவறினைச் செய்தனர். (A short History of India and Pakistan by t.Walter Wall Bank)(U.S.A.)1965. முஸ்லிம்லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும் லீக்கிலும் இருந்தனர்.மவ்லானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.
பிரிவினைப் பிரச்சாரம் யார் துவக்கியது?
இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம்.இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம். இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைப்பெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும். இந்நாட்டைவிட்டு வெளியேறிவிடுங்கள்;அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாகப்போடப்பட்டது. "முஸ்லிம்களுக்கும்.இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின் மூளையில்தான் முதன் முதலில் உதித்தது"என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்கச் செயலாளராக இருந்தவரும் காந்திஜியின் நெருங்கிய சகாவுமான பண்டிட்சுந்தர்லால்.'ரேடியன்ஸ்' வார இதழில் (13-6-87)ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். இன்று R.S.S. போற்றிப் புகழும் V.D.சாவர்க்கார்.இந்துக்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாகR.N.அகர்வால் தனது The National Movement என்ற நூலில் குறிப்பிடுகிறார். குர்தகி மட சங்கராச்சாரியார்,இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது.முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே.அவர்கள் விருந்தாளியைப்போலவே நடந்து கொள்ள வேண்டுமென்று முஸ்லிம்களை எச்சரித்தார். அகில இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்த ஹர்தயால்,A Joint Hindu-Muslim state is Sheer Nonsense "இந்து-முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது முழு முட்டாள்தனம்"என உரத்துச் சொன்னார். 1923ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டது.இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல்,இந்துக்களுக்குப் போர் பயிற்சிதரல்.அதன் முக்கிய குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை என்பதே.இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின இஸ்லாத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்றன.1924ல் லாஹூரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா)என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது.அதில் இஸ்லாமியர்கள் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டது. முஸ்லிம்களின் நிலை இவ்விதம் இந்துமதத் தலைவகளில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917லிருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்தது? இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்.1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார்.அதுவரை அவர் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார்.'The Ambassadur Hindu-Muslim Unity'என்று சரோஜினி நாயுடுவால் பாராட்டப்பட்டவர்.1993ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட பொழுது 'An Impossible Dream'நடைப்பெற இயலா கனவு'என்றார் ஜின்னா 1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக் 1940ம் ஆண்டுவரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை.1945,1946ல்தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.
வியாழன், 3 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக