வியாழன், 3 செப்டம்பர், 2009
R.S.S.ஐ நோக்கி ஒரு கேள்வி?
இன்று இந்தியாவைத் தூண்டிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S.அன்று என்ன செய்தது?இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே;பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினாரே;பிரிக்கவே கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய்படேல் சமாதனாப் படுத்திச் சம்மதிக்க வைத்தாரே;இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S. என்ன செய்தது?இன்று பாரதமாதாவைத் துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா?மாநாடுகள் நடத்திக் கண்டனத் தீர்மானம் போட்டார்களா?இல்லையே!ஏன்? முஸ்லிம்லீக்கை ஜின்னாசாஹிபை காயிதேமில்லத்தை முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை, ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினைவாதிகள் எனச் சொல்லுவது இல்லையே?ஏன்? இந்தியா பிளவுபட்டாலும் பரவாயில்லை முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக்கொண்டனர்:விரும்பினர் R.S.S.காரர்கள்.ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை.இந்நாட்டிலே பிறந்து இந்நாட்டிலே வளர்ந்து இந்நாட்டின் வளர்சிக்கும் வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படி போவார்கள்?அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித குரோத உணர்வே R.S.S.க்காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.சற்று சிந்தியுங்கள்! மேற்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித்தொகுப்புகளிலிருந்து நாம் என்ன புரிகிறோம்? பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் நடக்கவில்லை.இந்து-முஸ்லிம் கருத்து வேற்றுமையும்-குரோதமும் பிரிட்டிஷரால் திட்டமிடடு ஏற்படுத்தப்பட்டவை.முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ,திட்டமிடவோ இல்லை. இந்து தீவிரவாதிகளும் அடிக்கடித்தன்நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம். எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுமில்லை.மேற்கொண்டு உண்மை நிலையை அறிய விரும்புவோர்.H.M.Sreevai எழுதிய partition of India:Legend and Reality, என்ற நூலையும்,The dialogue Between Hindus and Muslims என்ற நூலையும் படித்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

excellent
பதிலளிநீக்குதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in